வரும் முன் காப்போம்!



Preventive Medicine Care!

மனித உடல் என்பது நம்மால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விசித்திர அமைப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு நரம்பும், ஒவ்வொரு உயிரணுவும் எதற்கும் காரணமாகத்தான் செயல்படுகிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில், நாம் உடலில் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களை அலட்சியமாகவே பார்க்கிறோம்.

ஒரு சின்ன சோர்வு, சிறிது களைப்பு, இரவில் தூக்கம் சீராக இல்லாமை, வயிற்றில் அடர்த்தி  இவை அனைத்தும் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதற்கான எச்சரிக்கைகள் என்பதை நம் வாழ்க்கையின் வேகத்தில் நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். 

ஆனால் உண்மையில் நோய்கள் எதுவும் திடீரென்று வருகின்றனவல்ல. ஒவ்வொன்றும் மெதுவாகவே உருவாகின்றன. ஆரம்ப கட்டத்தில் சிறிய சின்னங்களாகவே தோன்றும் இந்த அறிகுறிகளை நாம் உணர்ந்துவிட்டால், பெரும் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

இது போன்ற முன்னறிதல் என்பது ஒருவேளை நமக்குப் பழக்கமாக இருந்திருந்தால், இன்று உலகம் முழுக்க பரவிவரும் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், புற்றுநோய் போன்றவை இத்தனை பெரிய அளவில் தாக்கம்வைக்கக் கூடாது. உதாரணமாக, அதிக சோர்வு, பசிக்குறைவு, தூக்கமின்மை போன்றவை நீரிழிவின் ஆரம்ப அறிகுறிகள். 

சுவாசக் குறைபாடு, சிரமமான நடை, மார்பு வலி, இடது கைச் சோர்வு இவை அனைத்தும் மாரடைப்பிற்கான முதல் எச்சரிக்கைகள். ஆனால் அவற்றை நாம் ‘தினசரி வாழ்க்கைச்சிக்கல்கள்’ என்றே எடுத்துக்கொள்கிறோம். அந்த சின்னத்திலிருந்து பெரிய விபத்துக்கு நாம் செல்லும்போது, உண்மையை உணரும்போது பெரும்பாலும் தாமதமாகிவிடுகிறது.

இப்போது அதற்கும் மேலாக நாம் கவனிக்க வேண்டியது நம் உடலின் வெளிப்பாடுகள். சிறுநீர் வண்ணம், தோல் நிறம், நகங்களின் வடிவம், வாயின் வாசனை, நாக்கின் தோற்றம் இவை அனைத்தும் நம்மிடம் உடல் நலம் குறித்த தகவல்களைப் பகிரும் வழிகள். சிறுநீர் அடர்த்தியாகவும், மஞ்சளாகவும் இருந்தால் நீரிழிவு அல்லது உடல் நீரிழைவினைக் குறிக்கலாம். நாக்கு பச்சையாக இருந்தால் கல்லீரல் சிக்கல் இருக்கலாம். 

நகங்கள் இளமை இழந்தது போல் குப்புறமாக மாறினால், அது இரத்த சுழற்சி கோளாறுகளுக்கு காரணமாக இருக்கலாம். காலை எழுந்ததும் கடுமையான சோர்வு இருந்தால், அது இரவின் தூக்க நலமின்மை மட்டும் அல்ல, சில சமயம் தசைகளின் சோர்வு, இருதய பலவீனம் அல்லது ஹார்மோன் குறைபாடுகளுக்கும் காரணமாக இருக்கலாம்.

நம்முடைய உணர்வுகளும் நமது உடலைப் பற்றிய சிக்னல்கள் தருகின்றன. எப்போதும் சலிப்பாக, சோர்வாக, அல்லது ஏதோ தோன்றும் பேச்சிலிருக்கும் மனநிலைகள், உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பே. தூக்கம் சரியாக இல்லாமை, அடிக்கடி பயம், கோபம், சோகம் ஆகியவை நரம்பியல் அல்லது ஹார்மோன்களுடன் தொடர்புடையவை. ஒவ்வொரு பக்கச் சோர்வும், ஒவ்வொரு மனநிலை மாற்றமும் நம்மிடம் ஏதோ தவறாகச் சென்று கொண்டிருப்பதைக் கூறும் உள் ஒலி.

இந்த உடலின் மொழியை நாமே வாசிக்கத் தெரிந்துகொள்வது என்பது ஒரு கலை. அந்தக் கலை நமக்கு இருந்தால், நம்மால் எதையும் எதிர்கொள்ள முடியும். ஆனால் பல நேரங்களில் அந்த வாசிப்பில் நம்மிடம் ஒரு குறை ஏற்படுகிறது. அதைப் பூர்த்தி செய்யும் வழி  நவீன உலகம் வழங்கும் தொழில்நுட்பங்கள். அதில் முக்கியமானது  செயற்கை நுண்ணறிவு அல்லது AI எனப்படும் துறை.

  AI எனும் கணினி நுண்ணறிவு, இன்று உலகம் முழுவதும் மருத்துவத்தில் ஒரு முன்னேற்ற ஆயுதமாக பயன்பட்டு வருகிறது. அது நோய்களை தோன்றும் முன் கூட கண்டு பிடிக்கக் கூடிய திறனை வளர்த்துள்ளது. 

ஏன், நம்மில் பலரின் அன்றாட வாழ்வில் நாம் அணியும் ஸ்மார்ட் வாட்ச்கள், ஹெல்த் பேண்ட்கள் எல்லாம் AI தொழில்நுட்பத்துடன் இயங்குபவையே. அதன்மூலம் நமது இதயத் துடிப்பு, தூக்க அளவு, பயிற்சியின் தாக்கம், சுவாசதிறன், உடல் வெப்பம் போன்றவை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகின்றன.

 இந்த தகவல்களை AI அலசும் பொழுது, ஒருவேளை இதய துடிப்பில் ஒரு சீரற்ற நிலை தொடரும்போது, அது “இது மரபணு ரீதியான மாரடைப்புக்கான முன்னோட்டம்” என்று கருதி உடனே எச்சரிக்கையை தரும். 

அதற்கு மேல், இன்று சில AI கருவிகள், நமது கண்களைக் காண்பித்துப் படங்கள் எடுத்து இரத்தத்தில் உள்ள பசையூட்டிகளின் அளவை கணக்கிடும் தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மிகவும் ஆரம்ப கட்ட நோய்கள், மனிதக்கண்களால் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சிறிய கட்டிகள், அழற்சி நிலையைக் கூட கண்டறிவது சாத்தியமாகிறது.

 இதற்கு மேலாக, AI-யின் மிகப்பெரிய பங்களிப்பு புற்றுநோய்களில் தெரிகிறது. ஸ்கேன் படங்களை, எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஆகியவற்றை மனிதர்கள் பார்ப்பதைவிட அதிகத் துல்லியத்துடன் படித்து, “இங்கு ஒரு சில செல் உண்டாகியுள்ளன, இது எதிர்காலத்தில் புற்றுநோயாக வளர வாய்ப்பு உள்ளது” எனவும் கணிக்க முடிகிறது. சில நாடுகளில், இது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே நோயை கண்டுபிடித்து, நோயாளியின் வாழ்க்கையை பாதுகாப்பதில் வெற்றியடைந்துள்ளது.

 மீண்டும் மனநிலை நோய்களுக்கு வரும்போது, AI வாயிலாக குரலில் ஏற்படும் மாறுபாடுகள், முகத்தோற்றங்களில் ஏற்படும் மாற்றங்கள், நடைதடைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அல்ஸைமர், பார்கின்சன், கவலைக் கோளாறு, மன அழுத்தம் போன்றவற்றை தொடக்கத்திலேயே கண்டறிய முடிகிறது. இதுவே மனிதர்களுக்குப் புரியாத ஒரு அதிசயமான அறிவுத் திறனாகவே கூறப்படுகின்றது.

 முக்கியமாக, இன்று சில AI அமைப்புகள் நமது மருத்துவ வரலாறுகள், மரபணு தகவல்கள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சி நிலைகள், கூடவே சமூக நடத்தை வரை all in one place வைத்து, “இந்த நபர் இந்த நோயுக்கு ஆபத்தான நிலையை நோக்கிச் செல்கிறார்” என்று ஒரு முன்னறிவிப்பு அளிக்கின்றன. இதை Predictive Analytics என்று அழைப்பர். இது வெறும் கணிப்பு அல்ல. இது ஒரு அறிவீன செயலில் அடிப்படையற்ற முடிவு அல்ல.

இது Big Data, Machine Learning, Deep Learning போன்ற தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் துல்லியமான கணிப்பாகும். உதாரணமாக, ஒரு குடும்பத்தில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவருக்கும் இருதயநோய் இருந்தால், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மற்ற நபர்களில் எப்போது, என்ன காரணத்தால், எவ்வளவு சாத்தியத்தில் இது ஏற்படலாம் என்பதை AI கணிக்க முடிகிறது. அதன்படி உணவுமுறை, உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனைகள் போன்றவற்றையும் தனிப்பட்ட முறையில் (Personalized Healthcare) வழங்க முடிகிறது.

 இந்த நவீன உலகில், ஒரு நோயின் ஆரம்ப அறிகுறிகளை நமக்கே புரிந்துகொள்ள சில நேரங்களில் AI ஒரு நண்பனாக மாறுகிறது. அதனால் நாம் எதையும் அலட்சியமாக விட்டுவிடாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிகிறது. ஆனால் இதற்குள் ஒரு உண்மையை மறக்கக்கூடாது  AI ஒரு கருவி மட்டுமே. நம்முடைய உடலின் உணர்வுகளையும், வாழ்க்கை முறையையும் அதற்குள் பூர்த்தியாக கொடுக்க வேண்டியது நாம்தான்.

 அதாவது, AI நம் இதயத்தின் துடிப்பை கண்டுகொள்வது போல, நாம் நம் மனதின் அமைதியையும், உணவின் குணத்தையும், தூக்கத்தின் சீரையும் நம் உளரீதியில் கவனிக்க வேண்டியது அவசியம். “நான் நன்றாக தூங்கவில்லை” என்று ஒருவேளை AI சொன்னால், அது நாம் உணர்வதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்க வேண்டும். அது நம்மை நாமே நலமாக வாழச் செய்யும் வலுவான ஆதாரமாக செயல்பட வேண்டும்.

பண்டைய வாழ்க்கையில், மருத்துவம் என்பது முற்றிலும் கண்காணிப்பு மற்றும் வாழ்க்கைச்செயல்களைப் புரிந்துகொள்வதில்தான் இருந்தது. அந்த வழியை நாம் மறந்து விட்டோம். ஆனால் இன்று AI அதன் வாயிலாக  அதை நம்மிடம் மீண்டும் கொண்டு வந்துள்ளது. நாம் அதை ஒழுங்காக பயன்படுத்தினால், நாம் எதையும் எதிர்கொள்ளத் தயார். ஒரு நோயை ஆரம்பத்தில் கண்டறிவது, அதைச் சிகிச்சை செய்வதைவிட சுலபம் மட்டுமல்ல, பாதிப்பின்றி, வலி இன்றி, வாழ்க்கையின் தொடர்ச்சியை பாதுகாக்கும் ஒரே வழி.

அதனால்தான் இன்று மருத்துவர்கள் சொல்லும் ஒரு முக்கியமான வாசகம் “Prevention is better than cure” என்பதையே AI நவீன வடிவத்தில் மீண்டும் நிரூபிக்கிறது.முடிவில் சொல்லவேண்டியது  நம் உடலின் ஒவ்வொரு அசைவும் எதற்கும் காரணம்தான். 

அது நம்மிடம் பேசும் மொழியை நம்மால் மட்டும் வாசிக்க முடியவில்லை என்றால், AI போன்ற நவீன தொழில்நுட்பங்களை துணையாக வைத்துக்கொண்டு, நம்மை நாமே காத்துக்கொள்ளலாம். அறிவும், அனுபவமும் இணையும் இடம்தான் எதிர்கால மருத்துவம். அதில் நாமும் ஒரு பங்கு வகிக்க நாம் தயாராக இருக்கவேண்டும். நம் உடலை நாமே நேசித்தால், அது நம்மை எப்போதும் பாதுகாக்கும்.

- சுரேந்திரன்