தக்காளியின் மருத்துவ குணங்கள்!



*தக்காளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. அவை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க உதவுகின்றன. குறிப்பாக, தக்காளி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், தோல் நோய்களைக் குணப்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது.

*பசியைத் தூண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கிறது.

*தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கும் உதவுகின்றன. தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றுகின்றன.

*நூறு கிராம் தக்காளிப் பழத்தில் இருபது கிராம் மட்டுமே கலோரி இருப்பதால் எத்தனைப் பழங்கள் சாப்பிட்டாலும் உடல் பருமன் ஆகாது.

*நன்றாகப் பழுத்த தக்காளிப் பழத்தை சாறுபிழிந்து அருந்தினால் ரத்தம் சுத்திகரிக்கும்.  ரத்த சோகை குணமாகும்.

* சிறுநீரகத்தில் படிந்துள்ள கழிவுப் பொருட்கள் அனைத்தையும் வெளியேற்றும்.

*பழுத்தப் பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

*சிறுநீர் எரிச்சல், மேகநோய், உடலில் வீக்கம்.  உடல் பருமன், நீரிழிவு, குடல் நோய்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றையும் தக்காளிச் சாறு குணமாக்கும்.

* இதயநோய் உள்ளவர்கள் தினமும் ஐந்து பழங்களைச் சாறு பிழிந்து அருந்திவந்தால் நல்ல குணம் கிடைக்கும்.  நாவறட்சியும் அகலும், உடலும் மினுமினுக்கும்.

*தக்காளிப் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன. அதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன.

*தக்காளிப் பழச்சாறு நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

*இரவில் கண்பார்வை தெளிவாகத் தெரியாமல் இருப்பவர்கள் தக்காளிச் பழச்சாறு சாப்பிடுவதால் கண் பார்வை மேம்படுகிறது.

*மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு, வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் முதலிய நோய்கள் குணமாக, ஒரு டம்ளர் தக்காளிச் சாறுடன் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தொடர்ந்து பருகி வந்தால் குணம் கிடைக்கும்.  

*காசநோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களையும் குணப்படுத்துகிறது.  உடலுக்கு சக்தியையும் கொடுக்கும்.

 - ஆர்.கே.லிங்கேசன்